கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை!! வாலிபர் கைது!!

   -MMH

கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையை அடுத்த பெரியகடையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (70).  தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம ஆசாமியால் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 2½ பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது. 

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். விசாரணையில், புதுக் கோட்டை மாவட்டம் சீவகம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்ற கருப்பையா(25), முத்துலட்சுமியை கொலை செய்ததும், இவர், அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கட்டிட வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. 

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments