முகக்கவசம் அணிந்தவர்களுக்கு இலவச பயணச்சீட்டு!! தன்னார்வ அமைப்பின் அசத்தல் முயற்சி!!

-MMH

       திருவாரூர்மாவட்டம் மன்னார்குடியில் முக கவசம் அணிந்து அவர்களுக்கு இலவச பயண சீட்டு அசத்தும் தன்னார்வலர்கள் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குறிப்பாக, தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் இதன் பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒன்றாக கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.

ஆனாலும் இதில் பலரும் அலட்சியாக உள்ளார்கள். இந்நிலையில், ஜேசிஐ அமைப்பின் சார்பாக முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது முகக் கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், முகக் கவசம் அணிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மன்னார்குடியில் செயல்படும் தன்னார்வ அமைப்பினர், ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார்கள். பேருந்துகளில் முகக் கவசம் அணிந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கி அசத்தினார்கள். முகக் கவசம் அணியாத வர்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்து வரும் நிலையில் இதை தவிர்க்கும் விதமாக மன்னார்குடி மக்கள் மத்தியில் வெகுவாககவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பார்த்திபன், ரைட் ரபீக் மன்னார்குடி.

Comments

Anonymous said…
Super keep it up
Unknown said…
Super keep it up