கொரானா பரவலைதடுக்க டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை விட கோரிக்கை!!!!
இது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க(CAPA) தலைவர் ரவிசங்கர் கூறியதாவது: "தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம்.
இருப்பினும் எங்கள் சங்கம் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் உள்ளிட்ட அனைத்து வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை தினங்களில் முழுவதும் மூடப்பட வேண்டும்.
வார நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் இரவு 8: 00 மணிவரை மட்டுமே மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடற்கரைக்கு மக்கள் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை கூறி கடிதம் எழுதியிருக்கின்றோம். நாங்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். " இவ்வாறு அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments