திருட்டுபோன செல்போன்களை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர்!!

     -MMH

காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் புகார்பெறப்பட்டு திருட்டுபோன செல்போன்களை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பொதுமக்களிடம் திருப்பிகொடுத்தார்.

கோவை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வநாகரத்தினம் பொதுமக்களிடம் செல்போன்களை வழங்கினார். திருட்டுப்போன விலையுர்ந்த 50க்கு மேற்பட்ட செல்போன்கள் பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டது.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல் கண்கணிப்பாளர் இதுவரை 1660 செல்போன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுபோன செல்போன்கள் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments