கோவிட்டுக்கு பிறகு, இதுவே எதார்த்த நிலை! பயப்பட வேண்டாம்!! டாக்டரின் பாசிட்டிவ் மெசேஜ்!!

   -MMH

சென்னை: கொரோனா வந்ததால் பலர் அச்சத்தில் உள்ளார்கள். கொரோனாவிற்கு பிறகு 99 சதவீதம் பேர் தேறிவிடுகிறார்கள். சிலருக்கே பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே எதார்த்த நிலையை புரிந்து கொண்டு மக்கள் பயப்பட வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் வலிறுத்தி வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சம் தொட்டு வருகிறது. உயிரிழப்பும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள்.

இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் தற்போதை நிலையில் தினசரி பாதிப்பு 3லட்சம் முதல் 4 லட்சம் என்கிற அளவில் உள்ளது. தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் கொரோனவின் தீவிரம் இந்தியாவில் விரைவில் குறையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு என்ன பிரச்சைனைகள் எப்படி சரியாகிறது என்பதை பிரபல மருத்துவர் பாஹிம் யூனஸ் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவின்படி, கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள் 2-3 வாரங்களில் சரியாகிவிடுகிறார்கள். கொரோனா பாதித்தவர்களுக்கு- சில அறிகுறிகள் மாதங்களில் தீர்க்கப்படுகின்றது. மிக சிலருக்கே நீண்டகால பாதிப்பு ஏற்படுகிறது. அதுவும் அரிதான நிகழ்வாக உள்ளது.

கொரோனா அறிகுறி தோன்றிய 10 நாட்களில் தனிமைப்படுத்துல் முடிந்துவிடுகிறது. ஒருமுறை கொரோனா பாதித்தவர்களுக்கு- நோய் எதிர்ப்பு சக்தி 6-12 மாதங்கள் நீடிக்கும்.

மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அரிதான நிகழ்வாகவே நடக்கிறது. எனவே ஒன்று முதல் 3 மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்.

-செந்தில் முருகன்.

Comments