திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து, உடற்பயிற்சி நிலையங்களும் அரசு ஆணையை ஏற்று மூடல்..!!

 

-MMH

      திருவாரூர்மாவட்டம். கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தின் காரணமாக தமிழகத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களும் மற்றும், நோய் தொற்று எளிதில் பரவும் இடங்களுக்கும் அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி நிலையங்கள், என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமெச்சூர், ஆணழகன் சங்கம், ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்டம் அமெச்சூர் ஆணழகன் சங்கம் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்பயிற்சி நிலையங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும், என்று திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் செயலாளர் திரு முகமது ரபிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-அன்புநிதி, ரைட்ரபீக், ஈசா.


Comments