கொரோனா தடுப்பூசி இருப்பு பற்றாக்குறை!!

   -MMH

ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி போட காலையில் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். இதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் வைத்தனர். 

தற்போது உள்ள அசாதாரணமான சூழ்நிலையில் பல தனியார் மருத்துவமனைகளிலும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது. கொரோனா  இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் இச்சூழ்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள்  எதிர்நோக்கி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-குமார், ஊத்துக்குளி .

Comments