கோவையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து!

-MMH

   கோவையிலிருந்து, அரபு நாடுகளான ஷார்ஜா, துபாய் போன்ற நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். இந்தியாவுக்கும் துபாய்க்கும் இடையே விமான போக்குவரத்தை, ஐக்கிய அரபு அமீரகம் ரத்து செய்துள்ளது. இதன்படி நாளை முதல் அடுத்த, 10 நாட்களுக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

-அருண்குமார்.

Comments