கள்ளக்காதலில் ஒருவர் வெட்டி மண்ணில் புதைப்பு.!! - போலீசார் விசாரணை.!!
அந்த கம்பெனியில் சங்கர் (32 , செட்டியார்) S/o சமுத்திர பாண்டியன் 6/38 பிள்ளையார் கோவில் வீதி லட்சுமிபுரம் ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி மாவட்டம் என்பவர் இங்கு தங்கி ஒன்றரை மாதமாக வெல்டிங் வேலை செய்து வருகிறார், இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்ப நாகராஜ் (37, SC(A)) S/o ரங்கன், சந்திராபுரம், நெகமம் இவரும் இவரது 2-வது மனைவி அமுதா (36,SC(A)) w/o நாகராஜ் ஆகியோர மதுக்கரை மார்க்கெட் முனியப்பன் கோவில் வீதியில் அமுதாவின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்கள்.
இன்று 20/4/21ந்தேதி 00.45 மணிக்கு இங்கு கம்பெனியில் தங்கி வேலை செய்யக்கூடிய மேற்படி சங்கரும், நாகராஜ் மனைவி அமுதாவும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த நாகராஜ் இவர்களுடன் தகராறு செய்துள்ளார். அப்போது சங்கர் வைத்த்திருந்த சுத்தியால் நாகராஜன் தலையில் அடித்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சம்பவத்தை மறைப்பதற்காக அமுதாவும் சங்கரும் அங்கு மண் குவியல் இருந்ததைப் பார்த்து அந்த மண் குவியலில் மேற்படி இறந்த நாகராஜை போட்டு மூடி விட்டனர்
இது தொடர்பாக இந்த கம்பெனியின் உரிமையாளர் மயில்வாகனம்(57) என்பவர் 10.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு மதுக்கரை வட்டாட்சியர் திரு நாகராஜ் அவர்கள், Police scientific officerதிருமதி சங்கீதா அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் பேரூர் காவல் உட்கோட்ட திரு. சீனிவாசலு அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தற்போது விசாரணை செய்து வருகிறார்கள். சங்கர், அமுதா இருவரையும் கைது செய்து மதுரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்துபோன நாகராஜுக்கு,வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த துளசிமணி என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, துளசிமணி உடல்நிலை சரியில்லாமல் ஏற்கனவே இறந்துவிட்டார்,இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த அமுதா என்பவரை நாகராஜ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்,
அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் குமார் என்பவர் இறந்து விட்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இறந்து போன நாகராஜ் மேற்படி அமுதா மற்றும் 3 குழந்தைகளுடன் அமுதா வீட்டில் 8 மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
- சீனி,போத்தனூர்.
Comments