சாலை சரியில்லாததால் ஏற்பட்ட விபத்து..! அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் உயிர் தப்பினார்..!!

  -MMH

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோட்டில் ராக்கியாபாளையம் கட்டுமான பணிக்காக செங்கல் ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ரோட்டில் தோண்டப்பட்ட குழி சரி வர மூடாததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் இருந்த டிரைவர் மற்றும் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரோடு வேலை செய்பவர்கள், காண்ட்ராக்ட் எடுத்து இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்த்துக் கொள்ளலாம் மற்றும் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

-பாஷா, ஈசா.

Comments