நாய் தூங்கும் மடமாக மாறுகிறது ஆரம்ப சுகாதார நிலையம்..!!

  -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார குறைவாக காணப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆரம்பசுகாதார நிலையத்திற்கு போத்தனூர்   சுற்றுவட்டார பகுதி மக்கள் நோய் ஏற்பட்டால் தினந்தோறும் அங்கு வந்து தங்களது உடல்களை  காண்பித்து பயன் அடைந்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதார மையத்துக்கு உள் பராமரிப்பு சரியில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தினந்தோறும் கொரோனா நோய்த்தொற்று உள்ள நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் அங்கேயே போட்டு எரியூட்ட படுகிறது.


அதை சரிவர செய்யாத நிலையில் அந்த ஊசிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் காட்சிகள் நாம் காணப்படுவது மனதிற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் நாய்களும் அங்கே உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து நோயாளிகள் அச்சப்படுகிறார்கள்.


இதற்கு முந்தைய நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மிக நல்லமுறையில் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது இயங்கிவரும் சுகாதார நிலையம் நோய் தோற்று பரவக்கூடிய இந்த காலகட்டத்தில் சுகாதார நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொண்டு வந்தால் நோய் பரவுவதை தடுக்க முடியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று  மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பீர்முகம்மது, அனஸ், ஈசா.

Comments