ESI கேஷியருக்கு நான்காண்டு சிறை!! - CBI கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

     -MMH
     ஓசூர் இ.எஸ்.ஐ., கேஷியருக்கு, 11 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.) பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணமோகன்(45), என்பவர் கேஷியராக பணியாற்றி வந்தார். 

இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள், மருத்துவ செலவினங்கள் உள்ளிட்ட பணப்பலன்களை பெறுவதற்காக, இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர். காப்பீடு தொகை பெற ஒப்புதல் கிடைத்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., வாயிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2012- 2015 வரை, பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகை குறித்து அதிகாரிகள் தணிக்கை செய்த போது கிருஷ்ணமோகன் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை அவர் மற்றும் அவரது தாயார் வங்கி கணக்கில் செலுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதிகாரிகள் புகாரின் பேரில் கிருஷ்ணமோகன் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தனர். கோவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கிருஷ்ணமோகன் மீது 2017 ஆக. 25 ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமோகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

-சுரேந்தர்.

Comments