கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கப்படும் - அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

      -MMH

     கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று உலகத்தையே உலுக்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிமுக சார்பில் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒருமாத சம்பளம் நிவாரண தொகையாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அதிமுக தலைமை கழகம் இன்று  அறிவித்துள்ளது.

-குமார், ஊத்துக்குளி.


Comments