கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து..!

-MMH

                கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோயாளியை அழைத்து வரும் இந்த ஆம்புலன்ஸில் ஓட்டுநர் நோயாளி யாரும் தீ விபத்து ஏற்பட்ட போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டவுடனே அருகிலிருந்த தீயணைப்பு வீரர்கள் முழுவதுமாக தீயை

அணைத்தனர். மேலும் கடந்த சில நாட்களாகவே இந்த ஆம்புலன்சில் சில பழுதுகள் உள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments