12ல் தேர்தல்! புதிய எம்.எல்.ஏக்கள் மறவாமல் கொண்டு வரவேண்டியது என்ன!!

    -MMH

      16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை மறுதினம் 11-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய எம்.எல்.ஏக்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும், இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் , துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது என்று தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்த அறிவிப்பில், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் 3வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்திய அரசமைப்பின் கீழ் உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், பங்கேற்கும் உறுப்பினர்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை தவறாமல் கொண்டு வரவேண்டும்.

பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் வருகிற 12ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்கும் உறுப்பினர்களூம், பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான சான்றிதழை தவறாமல் கொண்டு வரவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments