நியாய விலைக் கடைகள் மூலம் 2000 ரூபாய் டோக்கன் கொடுக்கும் பணி துவக்கம்!!

     -MMH

கோவை மாவட்டம் மதுக்கரை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காலை 8 மணியிலிருந்து  ரூபாய் இரண்டாயிரத்து காண முன்பதிவு டோக்கன் நியாய விலை கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்  கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக  ரூபாய் இரண்டாயிரம் முன்பணமாக மே மாதம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் இதை அடுத்து மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூபாய் 2000 இன்று காலை 8 மணி முதல் நியாய விலைக் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் டோக்கன் பெற்று வருகின்றனர்  

-ஷாஜஹான், மதுக்கரை. ஈசா,

Comments