சிங்கம்புணரி நியாயவிலை கடைகளில் ரூ.2000 வினியோகம்!

 

-MMH

      தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படுமென தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3ஆம் தேதி ₹.4 ஆயிரம் வழங்குவதற்குப் பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ₹. 2,000 வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி கடந்த 10-ந்தேதி தலைமைச் செயலகத்தில் ₹.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, அதனடிப்படையில் கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) முதல் சிங்கம்புணரியில் உள்ள ஏழு நியாயவிலை கடைகளிலும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் KR பெரிய கருப்பன் அவர்கள் வழிகாட்டுதல்படி ₹.2,000 ரொக்கப்பணம் விநியோகம் இன்று துவங்கியது. இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பூமணி, நகர செயலாளர் யாகூப், TAPCMS கூட்டுறவு சங்க துணை தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் மனோகரன் மற்றும் திமுக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments