திருவாரூர் மாவட்ட சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021!!

      -MMH

     திருவாரூர் மாவட்டம் என்பது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய நிலப்பகுதி ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டங்களையும் இணைத்து 01.01.1997 அன்று திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 573 ஊர்கள், 10 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள்கள் உள்ளன.4 சட்டமன்றத் தொகுதிகள்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 2021ல்  ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தமாக 76.5% வாக்குகள் பதிவாகியிருந்தன. மே 2 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் திருவிக அரசினர் கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நான்கு தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு வந்துள்ளது.

திருவாரூர் தொகுதி:

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களின் சொந்த ஊர் மற்றும் அவர் வெற்றி பெற்ற கடைசி தொகுதி என்பது மட்டுமன்று இதுவரை இந்த தொகுதியை அதிமுக பிடித்ததே இல்லை என்பது போன்ற சுவராசியமான சூழ்நிலையில் 73.03%. வாக்குகள் பதிவாகியிருந்தன இதில் முதல் மூன்று இடத்தில் திமுகவின் வேட்பாளர் திரு.பூண்டி. கலைவாணன் அவர்கள் மொத்தம் 108906 வாக்குகள் பெற்று 51174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

அவரைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த திரு. ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் அவர்கள் 57732 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் மற்றும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த இர.வினோதினி அவர்கள்   26300 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் உள்ளார். 

மன்னார்குடி தொகுதி:

அரசியல், ஆன்மிகம் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்ட அழகிய மன்னார்குடி தொகுதியில் ஒட்டுமொத்தமாக 74.36% வாக்குகள் பதிவாகியிருந்தன இதில் முதல் மூன்று இடத்தில் திமுக வேட்பாளர் திரு. டிஆர்பி.ராஜா அவர்கள் ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது முறையாக 87172 வாக்குகளைப் பெற்று 37393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள்49779 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமுமுக வேட்பாளர் திரு. எஸ்.காமராஜ் அவர்கள் 40481 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

திருத்துறைபூண்டி தொகுதி:


கடல், காடுகள் வயல் மற்றும் விவசாயம் விவசாயிகள் பல உழைக்கும் வர்க்கத்தினரை உள்ளடக்கிய இந்த தொகுதியை 11 முறை கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வந்து கொண்டிருக்கின்றன. மொத்தமாக  76.79 வாக்குகள் பதிவாகி இருந்தன முதல் மூன்று இடத்தில் வெற்றியின் வரிசையில் 12வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர். திரு. மாரிமுத்து.அவர்கள் 97092 வாக்குகளைப் பெற்று 30068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் திரு. சுரேஷ்குமார் அவர்கள்67024 வாக்குகளை பெற்று மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர். அ.ஆர்த்தி அவர்கள் 15362 வாக்குகளைப் பெற்றுள்ளனர்

நன்னிலம் தொகுதி:

விவசாயம், வீர கலைகள் மட்டுமன்றி பல்வேறு புராண கோயில்களை உள்ளடக்கிய தொகுதி. இதில் மொத்தமாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 82% வாக்குகள் பதிவாகியிருந்தன.  இதில் முதல் மூன்று இடத்தில் இந்த தொகுதியில் மன்றல் உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் திரு. ஆர். காமராஜ் அவர்கள் 103637 வாக்குகள் பெற்று 4577 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று உள்ளார். தொடர்ந்து திமுக வேட்பாளர் திரு எஸ்.ஜோதி ராமன் அவர்கள் 99060 வாக்குகளைப் பெற்று மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ச.பாத்திமா பார்ஹானா 13362 வாக்குகளை பெற்றுள்ளார்.

4 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை திமுக 1 தொகுதியை அதிமுகவும் வென்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 -அன்புநிதி, பார்த்திபன், திருமலைக்குமார், ரைட் ரபிக்.

Comments

திமுக : திருவாரூர் முத்துவேல் கருணாநிதி
domesa said…
தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் நிலை படு மோசமான அதீத அகாளமான பாதால பல்லத்தை சந்திக்கப் போகிறது என்பது எனது கணிப்பு...
domesa said…
தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் நிலை படு மோசமான அதீத அகாளமான பாதால பல்லத்தை சந்திக்கப் போகிறது என்பது எனது கணிப்பு...