கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தோற்று அதிகம் உள்ள மாநிலங்கள்..!!

     -MMH
      இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் மிக அதிக பாதிப்பு இருந்தது. ஆனால் அம்மாநிலத்தில் எடுத்து அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது மிக வேகமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிக பாதிப்பு இருந்து வருவதை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களில் தான் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் பின்வருமாறு.

தமிழ்நாடு - 33,059

கேரளா - 31,337

கர்நாடகா - 30,309

மகாராஷ்டிரா

28,438

ஆந்திரா - 21,320

மேற்குவங்கம் - 19,428

ஒடிஷா - 10,321

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஆரோக்கியராஜ், ஈசா.

Comments