தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.... சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி!

 

-MMH

                           தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நீரிழிவு நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கத்தால் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காது மூக்கு தொண்டை அங்கு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்கக் கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அது போல் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைக்கோசிஸ் நோய் ஏற்படுகிறது.

சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை மூலம் இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் மூலம் தோலில் நுழையும் இந்த பூஞ்சை தோல் மீது பரவுகிறது. கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் பாதிக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments