சிங்கம்புணரி அருகே ஆடுகள், டூவீலர்கள் திருடிய 6 பேர் கைது!! புழுதிபட்டி போலீஸார் அதிரடி!!

       -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், புழுதிபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட திருமலைக்குடி அருகே பழனிச்சாமி தோட்டம் என்ற இடத்தில் இருந்து 5ஆடுகள் திருடியது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், பெருமாள்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (42 ) என்பவர் புழுதிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், புழுதிபட்டி காவல்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணியில் இருந்த போது ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு டாட்டா ஏஸ் வாகனமும், அதனைப் பின்தொடர்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களும் வந்துள்ளன. 

அவற்றில் வந்தவர்களை விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் ஆடுகள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகவும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. எனவே, அவர்கள் அனைவரையும் புழுதிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர்களனைவரும் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டனர். தாங்கள் ஓட்டிவந்த இரண்டு இரு சக்கர வாகனங்களையும் விராலிமலையில் திருடியதாகவும் கூறினர்.

 அதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருமலைக்குடியைச் சேர்ந்த ஜீவா என்ற சிவா (23),  அர்ஜுனன் (19),  உமேஷ் (28 ), புதுக்கோட்டை மாவட்டம், நல்லூரைச் சேர்ந்த சேகர்(40 ), அதே மாவட்டத்தைச் சேர்ந்த குளத்தூர் தாலுகா, செப்பலான்தோப்பு சதீஸ்குமார்(27) மற்றும் ராஜா (35) ஆகிய 6 பேர் மீது புழுதிபட்டி  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்த 5 ஆடுகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை   போலீசார் பறிமுதல் செய்தனர். ஆறு பேரும் காரைக்குடி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments