கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 8848 பேர் பாதிப்பு 200 உயிரிழப்பு.!!

-MMH

           கொரோனாவை தொடர்ந்து நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இந்நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாட்டில் 23 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பொறுத்து மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது மேலும் இந்நோய்க்கு இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்நிலையில்  கொரோனாவை மிஞ்சும் வகையில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.

கருப்பு பூஞ்சை நோய் பற்றிய ஒரு பார்வை:

மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது பாக்டீரியா வைரஸ் போல காற்றிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன அவை மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும் பின்னர் மூளைப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம் முறையான சிகிச்சை மேற்கொள்ளா விட்டால் கண் பார்வை இழப்பு உறுப்புகள் பாதிப்பு உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம் என எச்சரிக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன்.

-M.சுரேஷ்குமார், தமிழக துணை தலைமை நிருபர்.


Comments