பொதுக் கழிப்பிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை!! குளத்தை கழிப்பறைகலாக மாற்றிய அவலம்!!

      -MMH

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் புது தாராபுரம் சாலையில் உள்ள கணபதி நகர் மற்றும் சாமுண்டி நகர் பகுதியில் சுமார் 600 கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால், அனைவரும் அருகில் உள்ள கலிகாநாயக்கன் பட்டி, குலத்தை கழிப்பிடமாக பயன் படுத்தி வருகின்றனர்.

ஆனால் மழை காலங்களிலும் இரவு நேரங்களிலும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் பெண்கள் இரவு நேரங்களில் பாம்புகள், விஷ பூச்சிகளைக் கண்டு அச்சப்படுவதும் உண்டு. ஆகையால் உடனடியாக தங்களுக்கு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்று கூறிவருகின்றனர் .

இது சம்பந்தமாக   அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சிங்கரமுத்து, ஈசா.

Comments