தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் ஏலக்காய் கடத்தல்..!!

  -MMH

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 3 படகுகளில் மஞ்சள்,பீடி இலை, ஏலக்காய் கடத்தல் கடந்த மாதம் 27 28 29 ஆகிய தேதிகளில் நடந்தது.

இலங்கை அரசு கைது நடவடிக்கை:

கைது செய்தவர்களை இலங்கை அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுதலை செய்துள்ளனர்.

  கடந்த ஏப்ரல் 27ந் தேதி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 2780 கிலோ விரளி மஞ்சள் 93 பைகளில் பேக் செய்யபட்ட 378 கிலோ ஏலக்காய்,மல்லி விதை, சோப் எண்ணெய்  கடத்தப்பட்டது. 

ஏப்ரல் 28ந் தேதி 2790 கிலோ விரளி மஞ்சள், 803 கிலோ ஏலக்காயும் கடத்தப்பட்டது.

ஏப்ரல் 29ந் தேதி  1100 கிலோ பிடீ இலையுடன் 4 பேரை கைது செய்தனர். 

பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் இலங்கை காவல்துறையிடம் அந்நாட்டு கடற்படையினர் ஒப்படைத்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பீதி காரணமாக கைதானவர்களை மருத்துவ பரிசோதனை உட்படுத்திய இலங்கை கடற்படை, அரசின் உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைக்காமல் படகுகளை கொடுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

கடத்தலுக்கு முக்கிய காரணமாக கைதானவர்கள் முன்வைப்பது என்னவென்றால் அங்கு  (இலங்கை) அதிக விலை கிடைப்பதாக கூறுகின்றனர். 

தமிழகத்தில் சராசரியாக கிலோ ஏலக்காய் 250 ரூபாயாக  உள்ள நிலையில் இலங்கையில் கிலோ 3500 ரூபாயாக உள்ளது. 

தூத்துக்குடியில் ஒரு கிலோ முதல் தரமான பீடி இலை ரூ 320க்கு விற்கப்படுகிறது. இது இலங்கையில் ரூ 4500 வரை விற்கப்படுகிறதாம். 

இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி  வைக்க கடுமையான நடவடிக்கைு எடுக்க வேண்டும் என வலியுறுத்த பட்டு உள்ளது. 

இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது கடல்வழி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

நாளை வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், ஈசா.

Comments