பட்டப்பகலில் ஆற்றுக்குள் கவிழ்ந்த ஆம்னி பேருந்து பயணிகள் அதிர்ச்சி!!

    -MMH

       பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை வரை செல்லும் வழக்கமான தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்ட சில மணித்துளிகளில் பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொரோனகாலகட்டம் என்பதால் வழக்கமாக இரவில் செல்லும் பேருந்து இரவு நேர ஊரடங்கு காரணத்தால் நேரம் மாற்றியமைக்கப்பட்டு பகலில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புறப்பட்ட சில மணித்துளிகளில் பட்டுக்கோட்டை அருகே 20 அடி ஆழத்தில் பால கட்டைகளை உடைத்துக்கொண்டு கவிழ்ந்த பேருந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட ஐந்து நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-அன்புநிதி, ரைட் ரஃபிக்.

Comments