பொள்ளாச்சி ஜெயராமன் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றார்.

ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., முன்னிலை பெற்றது. ஆனால், கிராமப்பகுதிகளில், தி.மு.க.,வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததால், வெற்றி பெற முடியவில்லை. 

கடந்த, 2001 முதல், தொடர்ந்து, 20 ஆண்டுகளாக பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வசம் உள்ளது. தற்போதும், அ.தி.மு.க., வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தொகுதியில், நான்காவது முறையாக, பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த, 2011 -16ல் உடுமலை எம்.எல்.ஏ.,வாகவும் ஜெயராமன் இருந்தார் தற்போது வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ., ஆகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், M.சுரேஷ்குமார்.

Comments