சிங்கம்புணரி மக்கள் மருந்தகத்தின் சார்பில் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சிங்கம்புணரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மக்கள் மருந்தகத்தின் சார்பில் இன்று காலை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் கபசுர குடிநீர் அருந்தி, முகக்கவசங்கள் பெற்றுக் கொண்டு பயனடைந்தனர்.
- ராயல் ஹமீது, அப்துல்சலாம்.
Comments