பாதாளசாக்கடையினால் பழுதாகி உள்ள தார்சாலை!! - சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!!

    -MMH
    பாதாளசாக்கடையினால் தார்சாலை பழுதாகி உள்ளது. அதனை சீர் அமைத்து தருதல் கோரி உயர்திரு மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி பகுதி 99வது டிவிசன் காந்திநகர் மேட்டுத்தோட்டம், வெள்ளலூர் மெயின் ரோடுலிருந்து கல்லறைசேரி ரேசன் கடை வழியாகத் தான் இந்த பகுதிக்கு காந்திநகர் 30'அடி மெயின்  சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் ரோடு  மோசமான சூழ்நிலையாக குண்டும் குழியாக உள்ளது. இங்கு சுமார் 250 குடும்பதினருக்கு மேல் வசித்து வருகின்றனர். தாய்மார்கள், பெரியோர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மாணவர் மாணவிகள், முதியவர்கள் ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்காக அவசர காலத்திற்கு வெளிய செல்வதற்க்கு முடிவதில்லை. மழை நீர் வெளியே செல்லாமல் குளம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் 108 ஆம்புலன்சும் இதர வண்டி வாகனமும் செல்வதற்கு இடையூறாக இருக்கிறது.  இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயமும் மற்றும்  கொசு தொல்லை காய்ச்சல் சளி  இருமல் வாந்தி பேதி ஆகிய நோய்கள் பரவும் அப்பயமும் உள்ளது.

அனைவரும் இந்த மெயின் ரோடு வழியாகத்தான் உபயோகபடுத் துவார்கள் பாதளசாக்கடை பணிபுரியும் ஊழியர்கள் சாலையை சீரமைக்க வேண்டும்.  இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே உரிய கவனம் செலுத்தி  மீண்டும் பழுதடைந்த அந்த தார்சாலையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழி ஏற்படுத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்க்கு மண்டலம் உதவி ஆணையளர் அவர்கள் மற்றும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு Er.கு.சண்முகசுந்தரம் MP அவர்கள் முன்னால் குறிச்சி நகரமன்ற தலைவருமான திரு நா.பிரபாகரன் BA அவர்கள் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு  உறுப்பினர், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. மருதமலை சேனாதிபதி அவர்கள், குறிச்சி வடக்கு &தெற்கு பகுதி பொருப்பாளர்கள் திரு SA.காதர் அவர்கள் அனைவருக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

-பாஷா,திருப்பூர்.

Comments