கோவை சேரன் மாநகரில் இறைச்சி கடை திறந்து வைத்து வியாபாரம்!!

-MMH

ஊரடங்கின் இரண்டாவது நாளான இன்று மக்கள் கடைபிடித்து வருகின்றன. ஆனால், கோவை சேரன் மாநகரில் இறைச்சி கடை திறந்து வைத்து வியாபாரம் செய்யப்படுகிறது. மக்களும் இந்த கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சிறிதும் அச்சமின்றி முக கவசம்மும் இன்றி இறைச்சி வாங்க கடை முன் நின்று கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி ஒரு நோயை கட்டுப்படுத்துவது சிரமம்தான். இதை மக்கள் உணர்ந்து வரும் காலகட்டத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும்.

- பாஷா, திருப்பூர்.

Comments