ஒப்பந்த சுகாதார ஆய்வாளர்களை, நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!

-MMH

       ஒன்றரை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், கொரோனா பணியில் ஈடுபட்டு வரும், சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1, 600 சுகாதார பணியாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ரூ. 7 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 

கொரோனா நோயாளிகளை கண்டறிதல், சிகிச்சையில் சேர்ப்பது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்வது, விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

இந்நிலையில், 24 மணி நேரமும், பணியில் ஈடுபட்டு வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், 'முன்கள பணியாளர்கள் போல் பணியாற்றினாலும், அதற்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. 'எனவே, தமிழகத்தில் உள்ள 1, 600 ஒப்பந்த சுகாதார ஆய்வாளர்களை, நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments