வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் ! தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வேண்டுகோள் !!

 

-MMH

       கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. சின்ன சின்ன கிராமங்களில் கூட பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவுடன் அரசு உதவி மையத்திற்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு சென்றதும் தேவையிருப்பின் அரசு அமைத்திருக்கின்ற கொரோனா பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அனுப்பப்படுகிற்னர்.

அதில் பலரை வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி மருந்துகளையும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால் ஏழை மக்களின் வீடுகளில் ஒரு அறை மட்டுமே உள்ளது.  அவர்களால் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள இயலாது. அது மட்டுமில்லாமல் அவர்கள் கழிப்பறைகளும் பொதுக்கழிப்பறைகளாக உள்ளது.

அவர்களின் வீடுகளை சுற்றியுள்ள வீடுகளுக்கும் கொரோனா தொற்று எளிதாக பரவிவிடும் சூழல்தான் உள்ளது. இந்த நிலை நீடித்தால் கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக கொரோனா பரவல் ஏற்பட்டு நம்மால் சமாளிக்க இயலாத நிலை ஏற்ப்பட்டு விடும். அதனால் ஏழை மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் யாருக்கு தொற்று ஏற்படுகிறதோ அவர்களை அருகாமையில் இருக்கும் பள்ளிகளில் தங்க வைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும்,அந்த வீடுகளின் அருகாமையில் உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். மருத்துவமனைகளையும் பாதுகாக்க இயலும் என ம.தி.மு.க  இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளார்.

-செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments