ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதனால் வணிகப் பெருமக்களுக்கு ஏற்படும்நிலை என்ன..!!
வேகமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதில் மக்களுக்கு ஏற்படும் நிலை என்ன என்பதை அறிய சிலரிடம் கேட்டோம்.
மளிகை கடை உரிமையாளர் அல்-அமீன் நீடாமங்கலம். ஒருநாள் முழுநேர கடையடைப்பு என்பது எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு பொருளாதார சிக்கலான விஷயம் தான் அன்றைக்கான உணவு பொருட்களை அன்று வாங்கி சாப்பிடும் நிலை உள்ள மக்கள் அதிகம் உள்ள பகுதி இது . இன்றைக்கு ஆசைப்படுவதை மக்கள் இன்று வாங்கவில்லை எனில் நாளை அந்த வியாபாரம் நடக்குமா என்பது கேள்விக்குறியே..? இரண்டு மூன்று நாட்களுக்கு கடனாக வாங்கும் பொருட்கள் விற்காமல் தேக்க நிலை ஏற்பட்டால் உரியவர்களுக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்.
இறைச்சி கடை உரிமையாளர் சித்திக் நீடாமங்கலம். இறைச்சிகளை பொறுத்தவரையில் வாங்கி சில மணிகளில் சமைத்து உண்டால் தான் பலன் ஏற்படும். எல்லா குடும்பத்திலும் குளிர்சாதன பெட்டி வசதி என்பது இருக்காது. ஹோட்டல்களில் மொத்தமாக வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதியோ, மொத்தமாக வாங்கும் பொருளாதார வசதியோ இருக்காது. எங்களை நம்பி வேலை செய்பவர்களுக்கு சம்பள இழப்பு போன்று நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.
உயிர் இழப்பை விட பொருளாதார இழப்பு என்பது சரிசெய்துவிட கூடியதுதான் என்பதால் அரசின் உத்தரவை ஏற்று நடக்க வேண்டி இருக்கிறது இருப்பினும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் இரண்டு அல்லது ஒரு மூன்று மணி நேரம் கடைகளை திறக்க அனுமதி கிடைத்தால் பெரும்பாலான வணிகப் பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது நீடாமங்கலம் பகுதி வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திருமலைக்குமார், ரைட் ரபீக்.
Comments