கொரோனா பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

 

-MMH

            கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் ஆய்வகத்தில் கொரோனா சோதனை செய்ய விரும்புபவர்களில், முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.800 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனையில் குழு மந்திரிகளுக்கு கட்டணம் ரூ.600 இல் இருந்து ரூ.400 ஆக குறைதகப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீடு திட்டங்கள் இல்லாத பயணிகளுக்கு ரூ.1200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், இது ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதல் கட்டணமாக ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த 16 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அப்போதே கொரோனா பரிசோதனை கட்டண குறைப்பு தொடர்பான தகவல் வெளியான நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments