சிங்கம்புணரி அருகே செயின் பறிப்பு முயற்சி! சிக்கிய பழைய குற்றவாளி! நையப் புடைத்த மக்கள்!

    -MMH
     சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினோதினி (வயது 30). இவர் திருப்பத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று முறையூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூருக்குச் சென்று கொண்டிருந்தார். மருதிபட்டி அருகே கோயிலாப்பட்டி விலக்கு அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர், மொபட்டில் சென்று கொண்டிருந்த வினோதினி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.
அந்த முயற்சியில் வினோதினி தனது வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழ, செயின் பறிப்பு திருடர்களும் கீழே விழுந்துள்ளனர். உடனே வினோதினி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் அந்த இடத்தில் கூடியதால் கீழே விழுந்த திருடர்களில் வாகனத்தை ஓட்டிய நபர் மட்டும் தப்பி ஓடினார்.

மற்றொருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்த போது, பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்துறைைய சேர்ந்த மூக்காண்டி என்பவர் மகன் சேதுபதி(34) என்றும், தப்பி ஓடியவர் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரை சேர்ந்த கண்ணன் மகன் ராஜபாண்டி(28) என்றும் வந்தது. 

இருவரும் பழைய குற்றவாளிகள் என்றும் பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் இருவரின் மீதும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றும் காவல் துறையின் சார்பில் கூறப்படுகிறது. எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் சேதுபதியை கைது செய்துள்ளனர்.

- ராயல் ஹமீது & அப்துல்சலாம்.

Comments