கனமழையால் நிரம்புகிறது பரம்பிக்குளம் அணை..!!

     -MMH
   கோவை மாவட்டம்: கொரோனா எனும் கொடிய நோய் உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 'டவ் தே புயல்' ஒருபுறம் அடித்து மக்களை புரட்டிப் போடும் நிலையில், அதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் டேம் கேரளா பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் கோவை சுற்றியுள்ள பகுதியிலும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் உயருகிறது.

அதன் காரணமாக அதிக பட்சமாக 70mm மழை பதிவு ஆகியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்தப் பகுதி  மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பிரசாத், சசிகலா, ஈசா.

Comments