சென்னையில் ழகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி!!!

 

-MMH 

          சென்னை வியாசர்பாடி பெரம்பூர் பகுதியில் ழகரம் பவுண்டேஷன் வெகு ஆண்டுகளாக மக்களுக்கு தொண்டு செய்து வருகின்றது. தற்பொழுது கொரோனா காலகட்டம் என்பதால் பல ஏழை மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இன்றி அவதிப்படுகின்றனர் ஆகையால் ழகரம் பவுண்டேஷன் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி ஏழை மக்களுக்கு உதவி வருகிறது.

நமது இதழின் சார்பாக  ழகரம் பவுண்டேஷன் பொருளாளர் லோகேஷ் அவர்களிடம் ஒரு நேர்காணல்:-

''இந்த ஆம்புலன்சை ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காக வாங்கி உள்ளோம். மற்றவர்களுக்கும் கணிசமான சர்வீஸ் சார்ஜ் மட்டுமே வாங்குகிறோம். எங்கள் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளை வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கும் மற்றும் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கும் அழைத்துச் செல்வோம். ஏழை எளிய மக்களுக்கு கொரோனா பாதித்து இறந்தவர்களுக்கும் இறுதி சடங்கிற்கு உதவி செய்கிறோம். எங்கள் ஆம்புலன்சை ஒவ்வொரு சர்வீஸ் முடிந்த பிறகும் சானிடைஸ் செய்கிறோம். மக்களுக்கு சுத்தமான சேவையை தர என்றுமே விரும்புகிறோம்'' என்று கூறினார். 

இந்த வசதியை ஏழை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

-செந்தில் முருகன்,சென்னை.

Comments

Unknown said…
We are really glad about your article about Zhagaram Foundation. Thanks a lot for the opportunity and Support rendered. It's really a great appreciation for us to move forward with more energetic and keep up your good work to our society. For Donations please contact the number 9884808108 the same given in attached poster as well. Thanks