தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்!!

     -MMH

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது பஸ்கள் ஓடாது, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24-ந் தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

அதன்படி, பால்,காய்கறி, மளிகை மற்றும் பத்திரிகை போன்ற அத்தியாவசிய சேவைகள், வழக்கம் போல செயல்படும். மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க, தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்குள்ளும் இடையிலும் அரசு மற்றும் தனியார் நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

அனைத்து உணவகங்களிலும், பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும். மாநிலம் முழுவதும், அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள், அதிக பட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

-பீர்.

Comments