தேவகோட்டையில் துரித உணவு கடைகளில் அதிரடி சோதனை! அதிக நிறமூட்டப்பட்ட பொருள்கள் அழிப்பு!

  -MMH

தேவகோட்டையில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் துரித உணவு கடைகளிலும் மற்றும் பேக்கரிகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அக்கடைகளில் இருந்த, காலாவதியான குளிர்பானங்களும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிக நிறமூட்டப்பட்ட பொருள்கள்(காளான், சிக்கன்65, கோபி65) சுமார் 20 கிலோ அளவுக்கு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மற்றும் அஜினமோட்டோ சுமார் 2கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் அவரது உதவியாளர் மாணிக்கம் இருவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் துரித உணவு கடைகளிலும் ஆய்வு நடத்தினர். அப்பொழுது பேக்கரி மற்றும் கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் 10 கிலோ பாலிதீன் பைகள் இருப்பதும் தெரியவந்தது. அவற்றையும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் உடனடியாகப் பறிமுதல் செய்தார்.

- சங்கர், தேவகோட்டை .

Comments