பொள்ளாச்சியில் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி..!!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்திற்குள் செல்வதற்கும், வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு நடைமுறைக்கு வந்து உள்ளது. சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் சோதனை செய்யும்போது, இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை அனுமதிப்பதில்லை. 

பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில் வடக்கிபாளையம் பிரிவு, எஸ்.நாகூர், அந்தியூர், காட்டம்பட்டி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, வடக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 

இதேபோன்று வால்பாறை சரகத்தில் ரெட்டியாரூர், வஞ்சியா புரம், மளுக்குபாறை, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதிக்கபடாது. மேலும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் தேவை யில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.பொள்ளாச்சி.

Comments