நாளைய வரலாறு செய்தியின் எதிரொலியாக.! எருமைப்பாறை பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது..!!

     -MMH
   கோவை மாவட்டம் டாப்சிலிப் எருமைப்பாறை பகுதியில், வசிக்கும் பழங்குடி மக்கள் கொரொனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும், மருத்துவ உதவி தர வேண்டும் என்றும், அங்குள்ள வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் 160 நபர்கள் இங்கு இருப்பதாகவும் கொரொனா அச்சுறுத்தலின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள்பீதியில் இருந்தனர்.

இதன் காரணமாக நாளைய வரலாறு இதழில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடிக அந்த இடத்திற்குச் சென்று கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ததுடன் மருத்துவ வசதிகளையும் அளித்தார்கள். இதை கண்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பிரசாத் டாப்ஸ்லிப், ஈசா.

Comments