அதிரடி நடவடிக்கை எடுத்த கோவை அரசு மருத்துவமனை டீன்!!

-MMH

       கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பத்து ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு ஊழியர்களை அரசு மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் சாமானிய மக்களே அங்கு சிகிச்சைக்கு வருவதால் அவர்களிடம் மருத்துவமனையில் பணுபுரியும் ஊழியர்கள் சிலர் லஞ்சம் கேட்டு குடைச்சல் கொடுப்பது வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரிடம் மருத்துவமனை சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒப்பந்த ஊழியர்களான ராணி வயது (46), கண்ணம்மாள் ( 36) ஆகிய இருவரும் பத்து ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணை செய்த அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உடனடியாக அந்த இரண்டு பெண் ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு வரும் சாமானிய மக்களிடம் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், புதியதாக மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-I.அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments