கூட்டுறவு பணியாளர்களின் குமுறலை தீர்க்குமா திமுக அரசு..!!

-MMH

             கோவை மாவட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள்  கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்காக பயிர்க்கடன், நகைக்கடன், இயந்திரங்களுக்கான கடன் என பல வகையான கடன் திட்டங்களை செயல்படுத்துகிறது. 

 நியாயவிலைக்கடை எனம் ரேஷன் கடை ஊழியர்களும் இதில் அடங்குவர். இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்ற அரசு அலுவலக பணியாளர்களை விட குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுவது இல்லை. கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா காலகட்டத்திலும் முழுஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

முந்தைய அதிமுக அரசு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் நகை கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்து அறிவித்தது. ஆனால் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஏற்கனவே அளித்துவந்த ஈட்டப்படாத விடுப்பு காண ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி வைத்தது.. மேலும் ஓய்வு பெறும் வயதை  60 வயதாக உயர்த்தியது.

இந்நிலையில் தற்போது  அரசுப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ஒரு வருடத்திற்கு வழங்க படாது என்று தற்போது அரசு அறிவித்துள்ளது. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான், இயற்கைப் பேரிடர், கொரோனா நோய்த் தொற்று மற்றும் முழு ஊரடங்கு காலத்திலும் பல இன்னல்களை கடந்து  தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் எங்களுக்கும் அதே நிலைதான் அளிக்கப்படுகிறதுஇது என்ன அநியாயம்?

என வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள்  என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது. இது பாராட்டக்கூடிய விஷயம் தான், ஆனால் கூட்டுறவுத் சங்கங்களில் பணிபுரிவோருக்கு எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது ஒரு பாராட்டுதல் கூட அறிவிக்கவில்லை.

 தற்போது அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்க பட்டு வருகிறது, இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இருந்தாலும் ஆபத்தான காலகட்டத்திலும் துணிந்து கஷ்டப்பட்டு பணியாற்றும் எங்களுக்கு தற்போதைய தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. எந்த அதிகாரிகளும், எந்தத் தலைவர்களும் எங்களுக்காக பேச முன்வரவில்லை. எப்பொழுதும் பொதுமக்களோடு  தொடர்ந்து பணியாற்றும் எங்களுக்காக யார் பேசுவது? என்று குரல் ஓங்கி வருகிறது.

பொதுமக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தற்போதுள்ள திமுக அரசின் செவிகளுக்கு எட்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 200 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 4,500 கூட்டுறவு கடன் சங்கங்கள் இருக்கிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் உட்பட அனைத்து கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வழி செய்ய வேண்டும்  எனவும் முன் கலர் பணியாளர்களுக்கு உரிய சலுகைகள் மற்றும் புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கவனத்தில் கொள்ள  வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

 -குமார், ஊத்துக்குளி.ஈசா.

Comments