இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! தமிழக அரசு அறிவிப்பு!

     -MMH

     இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவும் வேகம் அதிகமெடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 31,892 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் 24ம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது.

புது கட்டுப்பாடுகள்!

காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் தேனீர் கடைகளுக்கு இயங்க அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது இயங்கி வரும் காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு அனுமதியில்லை.

மின் வணிக நிறுவனங்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். ஏற்கனவே அமலில் உள்ள இரவு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஏடிஎம், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசியப் பணிகளான திருமணங்கள், இறப்பு மற்றும் முதியோர்களைப் பராமரிக்கும் தேவைக்காக மாவட்டத்திற்குள்ளும் வெளியேயும் பயணிக்கும்போது இ-பதிவு முறை கட்டாயம்.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments