சிங்கம்புணரியில் கட்டுப்பாட்டுடன் கண்ணியம் காத்த திமுகவினர்!

   -MMH    

    நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த சனியன்று திமுகவினருக்கு அறிக்கை வாயிலாக விடுத்த வேண்டுகோளில், 'தேர்தலில் கட்டாயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிறன்று ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் இந்த வெற்றியை வீதிகளில் கொண்டாட வேண்டாம் எனவும் கொரானா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள வெற்றியை வீடுகளிலிருந்தே கொண்டாடுமாறும்' வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று, திமுகவின் வெற்றி பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டங்களின்றி சிங்கம்புணரி சாலைகள் வெறிச்சோடி இருந்தன. திமுகவின் அலுவலகமான அண்ணா மன்றமும் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது.

வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் திமுகவினர் இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு, கண்ணியத்துடன் நடந்து கொண்டனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments