பாவங்களைப் போக்கும் சித்திரை அம்மாவாசை!!
ஒவ்வொரு மனிதனுடைய கடமையாக பித்ருக்கள், நம் குலதெய்வம் , சுற்றத்தார், உறவினர் அனைவருக்கும் மற்றும் தனக்கென்று உள்ள கடமைகளை தவறாமல் செய்யவேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். பித்ருக்கள் வழிபாடு என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும் .
அதை முறையாக செய்து வருபவர்கள் வருடம் குடும்பம் வளர்ச்சி அடையும் என்று கருட புராணம் கூறுகிறது. சித்திரை அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து மறைந்த முன்னோர்கள் உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய வேண்டும். தற்பொழுது உள்ள ஊரடங்கு காலத்தில் வெளியில் சென்று திதி தர்ப்பணம் செய்ய இயலாததால் வீட்டில் இருந்தபடியே முன்னோர்களுக்கு படையல் வைத்து காகத்திற்கு எள் கலந்த சாதத்தை வழங்கவேண்டும். பொதுவாக அமாவாசை தினத்தன்று காலையில் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருந்து மதியம் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள்.
அது அவர் அவர் உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது. பொதுவாக அமாவாசை தினத்தன்று விரதம் இருந்தால் முன்னோர்கள் சாபம் நீங்கப்பெற்று இறையருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும் நீண்ட காலமாக தடைப்பட்டுவந்த திருமண நிகழ்வுகள் மற்றும் சுபகாரியங்கள் வீட்டில் நடைபெறும். கொரோனா ஊரடங்கு தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பொது பொது இடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்து தங்களது கடமைகளை செவ்வனே செய்து இறையருள் பெறுக.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments