சமூக இடைவெளி பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு!!
கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு 14 நாட்கள் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. பகல் 12 மணி வரை ஒரு சில கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இந்நிலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல், பொதுமுடக்க அறிவிப்பை அலட்சியம் காட்டும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை மகாலிங்கபுரம் வெள்ளலூர் ரோடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அளவுக்கதிகமான மக்கள் கூட்டம் ஆனால் பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் ஒரு சிலர் முகக் கவசம் அணியாமலும் அலட்சியப் போக்குடன் இருக்கிறார்கள். இதனால் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.
-ராஜேஷ்.
Comments