திருமணத்தின்போது தங்கத் தாலியைத் திருடிய புரோகிதர்! வீடியோவில் சிக்கினார்!!

 

-MMH

        திருமணம் நடத்தி வைத்த புரோகிதர், தாலி சங்கிலியைத் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள பெத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜனசுந்தர், திராட்சு ஆகியோருக்கு சமீபத்தில் காஜுவாக்காவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டியபின் அந்தப் பகுதியில் உள்ள சம்பிரதாயத்தின் அடிப்படையில் தங்கத்தால் தயார் செய்யப்பட்ட தாலிச் சங்கிலியை மணமகள் கழுத்தில் மணமகன் அணிவிப்பது வழக்கம். இந்நிலையில், தாலியுடன் வைக்கப்படிருந்த சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை காணவில்லை. ஆனால், அதற்குள் திருமணம் நடத்தி வைப்பதற்காக வந்திருந்த புரோகிதர் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டார்.

எனவே, புரோகிதர் மீது சந்தேகம் கொண்ட மணமகன் வீட்டார், அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, புரோகிதர் வீட்டுக்குச் சென்று கேட்டபோது சங்கிலியை அவர் எடுக்கவில்லை என்று கூறிவிட்டார். இதற்கிடையே திருமணத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது, புரோகிதர் தங்கச்சங்கிலியை எடுத்த காட்சி அதில் பதிவாகி இருந்தது.

இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காஜுவாக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை திருடிய குற்றத்திற்காக புரோகிதர் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

-பாரூக்.

Comments