கோவை தொகுதி பி. ஆர். நடராஜன்,எம் பி கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் மனு!!!

-MMH

        கொரோனா தொற்று இரண்டாவது அலை கோவை மாவட்டத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கிராம பகுதிகளிலும், கோவை மாநகர உட்பகுதிகளிலும் மற்றும் புறநகர பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. அதே நேரத்தில், நோய் பரவலை கட்டுப்படுத்துதல் மிகப்பெரிய கடமையாகும்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் சுய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். இதற்காக, மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர் வலர்கள், வருவாய்துறை, காவல்துறை ஆகிய துறைகளை கொண்ட விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும். வீடுகளுக்குள் சுயமாக முடங்குவதுதான் கொரோனா பரவலை தடுக்க உதவும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments