இனி புதியதாக போடப்படும் சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டுமாம்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

     -MMH

     தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சாலை பழுதடைந்திருந்தால் புதிய சாலை போடுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாக இவ்வாறு பழுதடைந்த சாலையினை சரி செய்யும்போது ஊழியர்கள் பழைய சாலையின் மீதுதான் தாரை ஊற்றுவார்கள்.

தாருடன் ஜல்லி போன்றவை கலந்து புதிய சாலையினை அமைப்பர். இது நமது தமிழகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றாகும். இவ்வாறு சாலை மீதே சாலை போடுவதினால் சாலையின் உயரம் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவாக பழுதடையாமல், சீரமைக்கப்படாமல் இருக்கும் கிளை சாலைகளின் உயரம் அப்படியே இருக்கும்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுண்டு. இவ்வாறான சாலைகளின் வளைவுகளில் பைக்குகளில் திரும்பும்போது சிறிய தடுமாற்றத்தை பெரும்பாலான வாகன ஓட்டிகள் சந்திந்திருப்பர்.

நன்கு பைக் ஓட்ட தெரிந்தவர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே தற்போது தான் பைக்கை ஓட்ட கற்று கொண்டு வருபவர்களுக்கு அத்தகைய வளைவுகளின்போது சற்று பயம் உள்ளுக்குள் வந்துவிடும். சில நேரங்களில் இது விபத்திலும் கொண்டு சென்று முடிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சாலையில் உயரம் அதிகரிப்பதால் மழை நீர் அருகில் உள்ள கட்டடங்களுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், சில இடங்களில் தண்ணீர் உடன் சேர்த்து புதியதாக போடப்பட்ட சாலையும் கூடவே அடித்து செல்வதையும் பார்த்திருக்கிறோம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பழுதான சாலைக்கு மாற்று சாலை போடும்போது, பழைய சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதியதாக சாலை போட வேண்டுமென தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை வெகுவாக குறைக்கும் என கூறியுள்ள அவர், எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக்கூடாது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேரூராட்சி, நகராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை எனவும், சாலை போடும்போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

பல்வேறு இடங்களில் சாலைகளின் தரம் குறைவாக இருப்பதே அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள தலைமை செயலாளர், எனவே சாலை போடும்போது அதற்கான மட்டத்தை சரியான அளவில் போட வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாலைகளின் தரத்தை ஆராயும் அதேநேரத்தில், மோட்டார்சைக்கிள்களை லட்சங்களை கொடுத்து வாங்கினாலும், கூடவே ஹெல்மெட்டையும் வாங்கி பயன்படுத்தவது அவசியமானதாகும். ஏனெனில் பெரியர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என மோட்டார் வாகன சட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இருசக்கர வாகனங்களில் தாய்-தந்தை என இருவர் ஹெல்மெட் அணிந்து பயணித்தாலும் அவர்களுடன் அமர்ந்து செல்லும் குழந்தைகள் (சிறுவர்கள்) தலைக்கவசம் ஏதுமின்றி பயணிப்பதை நாம் கண்டிருப்போம். அவ்வாறு, நீங்களும் பயணிப்பவரானால் விரைவில் நீங்கள் உச்சபட்ச அபராதத்தைப் பெறுவது உறுதி.

ஆமாங்க, சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி மிக விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் என்ற ஒன்றையே பயன்படுத்துவதில்லை. இதில் குழந்தைகளுக்கு எங்கு அவர்கள் ஹெல்மெட் அணிவிக்க போகிறார்கள் என்ற எண்ணமே பலரின் மனத்தில் தோன்றுகின்றது.

மிக சமீபத்தில்கூட சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பத்திருந்தது. இந்த நிலையிலேயே இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்ற விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

குறிப்பாக, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தை இருசக்கர வாகனத்தில் பயணிக்கமானால் அக்குழைந்தைக்குக் கட்டாயம் தலையைப் பாதுகாக்கும் கவசம் பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குழந்தைகளையும் மூன்றாம் நபர் ரைடராக அறிவித்து இந்த புதிய விதி இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் வாயிலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

இதனை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளிடத்தில் இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194ஏ-வின் கீழ் ரூ. 1,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதி மிக மிக விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனை தீவிரமாக செயல்படுத்தும் முயற்சியில் அரசு களமிறங்கியிருக்கின்றது.

ஆகையால், போக்குவரத்து போலீஸார் எப்போது வேண்டுமானால் இப்புதிய விதியின்கீழ் குழைந்தைகளுக்கு தலைக்கவசம் அணியாத பெற்றோர்கள் (இருசக்கர வாகன ஓட்டிகள்) இடத்தில் அபராதம் வசூலிக்க தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அவசியம் என்பதை போக்குவரத்துத்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. இது பயணத்தின்போது ஏற்படும் கசப்பான அனுபவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும் என நம்பப்படுகின்றது. எனவேதான் மிக தீவிரமாக இந்த விதியை நடைமுறைப்படுத்த போக்குவரத்துத்துறை ஆயத்தமாகி வருகின்றது.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments