சாமானியர்களின் குரல் கண்டுகொள்ளுமா அரசு!!

   -MMH

கோவை மாவட்டம்:

                  சனி மற்றும் ஞாயிறு இரண்டு மது கடைகள் இல்லாததால் நாடுமுழுவதும் ஒரே நாளில் ரூ. 292 கோடி மதுவை விற்று சாதனை, அதும் கோவை மாவட்டம் மட்டும் ரூ.56 கோடி தமிழ்நாடு மதுவை மட்டும் நம்பி வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மதுவை ஒலிக்க ஒருகூட்டம் போராடிக் கொண்டுருக்கும் நிலையில், அரசே குடிமகன்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்களுக்கு வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொரோனா தோற்று கொடிய நோயிலிருந்து. மரணத்தின் பிடியில் சிக்கிதவித்து தன் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலே முடங்கி தவிக்கும் மக்களுக்கு நல்வழியை எற்படுத்தி கொடுக்க அரசு வரவேண்டும் என்று சாமானிய மக்களின் குரல் இது.

இதுகுறித்து பெண்கள் கூறுவதாவது 500 ரூபாய் சம்பாதிக்கும் எங்களது குடும்பத்தலைவர் 200 ரூபாய் மதுவுக்கு கொடுத்துவிட்டு வருவது எங்கள் வாழ்விற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை அரசு கருத்தில் கொண்டு எங்களைப்போல் சாமானிய மக்களை காக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர். மதுவை ஒளித்து நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று பெண்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆரோக்கியராஜ், எல் குமார், ஈசா.

Comments